விபத்துக்குள்ளான ஈரானிய போர் கப்பல்-   காலி வைத்தியசாலையில் 32 ஈரானியர்கள் அனுமதி

விபத்துக்குள்ளான ஈரானிய போர் கப்பல்- காலி வைத்தியசாலையில் 32 ஈரானியர்கள் அனுமதி

விபத்துக்குள்ளான ஈரானிய போர்க்கப்பலான ‘IRIS Dena’ விலிருந்து மீட்கப்பட்டு காலிக்கு கொண்டு வரப்பட்ட 32 ஈரானியர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இன்று (04) அதிகாலை கப்பல் விபத்துக்குள்ளானதாக அறிவித்ததால், இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

குறித்த ஈரானிய கடற்படைக் கப்பல் சிரமங்களை எதிர்கொண்டபோது அதில் சுமார் 180 பேர் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுக்கு முதலில் காலை 05.08 மணியளவில் ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. ஈரானிய கடற்படைக் கப்பலுக்கு உதவ உடனடியாக இரண்டு கடற்படைக் கப்பல்களை அனுப்பினோம்.

அதன்பிறகு, உதவி தேவைப்படுபவர்களை மீட்க கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடவடிக்கை எடுத்தன. அவசர உதவி தேவைப்படும் 30 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். அவர்கள் காலியில் உள்ள கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை, ஆனால் காலி கடற்கரைக்கு அருகில் இருந்தது.

“கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச மாநாடு, 1979 இன் படி, எந்தவொரு கப்பலும் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதற்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )