30 சதவீத வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன – தபால்மா அதிபர்

30 சதவீத வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன – தபால்மா அதிபர்

உத்தியோகபூர்வ தேர்தல் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கும் பணி  30%  முடிவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி முதல் வீடு வீடாக வாக்குச்சீட்டுகள் விநியோகிப்பதற்கான அதிகாரப்பூர்வ பணி தனது துறையிடம் ஒப்படைக்கப்பட்டது முதல் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

14 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வாக்கிச்சீட்டு விநியோகம் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை தொடரும். ஏப்ரல் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விநியோக நாளாகக் கருதப்பட்டு விநியோகம் இடம்பெற உள்ளது.

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் மே 6 ஆம் திகதி வரை தபால் துறை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே முழு ஒப்புதலுடன் விடுமுறை பெற முடியும் என்றும் தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

Share This