பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் சீனாவின் 3 ஆய்வு கப்பல்கள்

‘எங்களது அனுமதியைப் பெறாமல் எமது முக்கிய பொருளாதார வலயப் பிராந்தியததிற்குள் சீனாவின் மூன்று ஆராய்ச்சி கப்பல்கள் பிரவேசித்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
எமது முக்கிய பொருளாதார வலயப் பிராந்தியத்திற்குள் பிரவேசிப்பதற்கும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எமது அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கு பிலிப்பைன்ஸ் கடற்பரப்புக்கு பொறுப்பான பேச்சாளர் கொமடோர் ஜே டாரியேலா, லுசோன் தீவுக்கு மேற்கே ஜுஹாயுன், சியாங் யாங் ஹாங் – 10 ஆகிய இரண்டு ஆய்வுக் கப்பல்கள் அவதானிக்கப்பட்டன.
இந்த ஆராய்ச்சிக் கப்பல்கள் தற்போது தொடர்ந்தும் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
நாங்கள் ஏற்கனவே பலவான் தீவிலுள்ள எங்கள் கடலோர காவல்படை பிரிவுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். அக்கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவென கப்பலொன்றை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தோடு பெய் டியாவோ 996 என்ற கப்பலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கப்பல்களின் நகர்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.