
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
இதன்போது இலங்கை கடற்படையினரால் 02 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான மீனவர்கள் காங்கேசன்துறை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
