சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி – 22 வயது இளைஞன் கைது
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நபரொருவரிடமிருந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் நபரொருவரிடமிருந்து 500,000 ரூபாவிற்கும் மேல் பணம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என கூறி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, திகன பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.