
22 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் பகுதிகளிலேயே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில், தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் 02 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், தலைமன்னார் கடற்பரப்பில் மேலும் 10 தமிழக மீனவர்கள் 02 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் , மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
