உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (28) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பாடசாலையின் ஒரே வகுப்பைச் சேர்ந்த 21 மாணவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக 10 மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதர்கள் உணவின் மாதிரியை பெற்றுச் சென்றுள்ளனர்.

இருப்பினும் ஏனைய வகுப்பு சேர்ந்த எந்த ஒரு மாணவர்களுக்கும் உணவு ஒவ்வாமை ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This