
2026 ஏஐ தாக்க உச்சி மாநாடு -பில் கேட்ஸ் நிகழ்த்தவிருந்த முக்கிய உரை திடீரென ரத்து
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் நிகழ்த்தவிருந்த முக்கிய உரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அமெரிக்காவில் வெளியான நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களில், பில் கேட்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்ஸ்டீன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் பழகியதற்காக வருந்துவதாகவும், அவர் சுமத்தியுள்ள மின்னஞ்சல் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தியாவில் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் கேட்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் செயல்படும் என அந்த அமைப்பு உறுதி அளித்துள்ளது.
CATEGORIES இந்தியா
