2025 உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை

2025 உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நாளை (6) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகளை 2026 ஜனவரி மாதம்
12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  2362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என  இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )