வவுனியா நெளுக்குளம் மாணவி வர்த்தக பிரிவில் முதல் இடம்!

வவுனியா நெளுக்குளம் மாணவி வர்த்தக பிரிவில் முதல் இடம்!

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26.04) மாலை வெளியாகியிருந்தன.

இதில் வர்த்தகப் பிரிவில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணம் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், தேசிய ரீதியில் 357வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

CATEGORIES
Share This