புற்றுநோயால் ஆண்டுதோறும் 200 சிறுவர்கள் மரணம்

புற்றுநோய் காரணமாக ஆண்டு தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சூரஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந்த நிலைமையைக் குறைக்க முடியும் என்றும் வைத்திய நிபுணர் டொக்டர் சூரஜ் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“2022ஆம் ஆண்டில், புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டபோது, அவர்களில் 904 பேர் சிறுவர்கள் ஆவர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கான தரவுகளைப் பார்க்கும்போது, சிறுவர்கள் புற்றுநோய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளதென்பது தெளிவாகக் காட்டுகிறது.
சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் எண்ணிக்கை 600, 700, 800 என்ற வரம்பிற்குள் இருந்தது. ஆனால், தற்போது ஆண்டுக்கு 900 வரையான சிறுவர்கள் புற்றுநோயாளர்களாக பதிவாகின்றனர்.
2019 இல் புற்றுநோய் காரணமாக சுமார் 200 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால், 2020இல், சராசரியாக ஆண்டுக்கு சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோய்க்கு உள்ளாகி இறக்கின்றனர் என பதிவாளர் நாயகம் திணைக்களம் கூறுகிறது.
இதற்கிடையில், குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும் தாமதமாகப் பதிவாகும் நோயாளிகள் அதிகமாக உள்ளனர்” என்றார்.