கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய்
இந்த ஆண்டு கலால் வரி வருவாய் 200 பில்லியனைத் தாண்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 232 பில்லியன் ரூபாவாகும் எனவும், நவம்பர் 30ஆம் திகதியாகும் போது அதிலிருந்து 200 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை வசூலிக்க முடிந்துள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களத்தின் 120 வருட வரலாற்றில் 200 பில்லியனைத் தாண்டிய வருமானம் இதுவே முதல் தடவை ஆகும்.
மேலும், இந்த வருமானங்கள் மதுபான உற்பத்திக்கான கலால் வரியாகவும் புகையிலை வரிச் சட்டத்தின் கீழ் ,வரியாகவும் ஈட்டப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.