சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது

சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தசம் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், துப்பாக்கிதாரி சுமார் 100 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

60 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் சிட்னி நகரின் மேற்கில் உள்ள ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பத்திற்கான காரணம் தெரியவரவில்லை.  காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.

துப்பாக்கிதாரியின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை, எனினும், இந்தச் சம்பம் “பயங்கரவாத நடவடிக்கை இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளளனர்.

சம்பம்வம் குறித்து நியூ சவுத் வேல்ஸ்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )