இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய 20 வீதமானோர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வு

CEB பொறியாளர்களில் கிட்டத்தட்ட 20% பேர் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்
இலங்கை மின்சார சபையில் (CEB) பணியாற்றிய பொறியாளர்களில் 20 வீதமானோர் அண்மைய ஆண்டுகளில் கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய இலாபகரமான பதவிகளைப் பெறுவதற்காக வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் M.H. தம்மிகே விமலரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 226 பொறியாளர்கள் அதாவது மின்சார திணைக்களத்தின் பணியாளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர்களில், 85 வீதமானோர் மின் பொறியாளர்கள். 8 வீதமானோர் இயந்திர பொறியாளர்கள் என்பதுடன், 7 வீதமானோர் சிவில் பொறியாளர்கள். பெரும்பாலானோர் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் உயர் பதவிகளுக்கான இவ்வாறு குடிபெயர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.