அண்மைய தினங்களில் 195 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் – காவிந்த ஜயவர்தன

அண்மைய தினங்களில் 195 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்கலுக்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது ஒரு நல்ல தீர்மானம்.
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெனில் புதிய தொழிநுட்பத்துடன் பயணிக்க வேண்டும். நோயளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அது முக்கியமாகும்.
ஆரம்ப சுகாதார சேவைக்கு நிதி ஒதுக்கியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
தொற்று நோய் நிலைமைக்கு முகங்கொடுப்தற்கும் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதையும் பாராட்டுகின்றோம்.
நல்ல விடயங்களை பாராட்ட நாங்கள் பாசாங்கு காட்ட மாட்டோம்.
அன்று நாம் சுவசெரிய ஆரம்பிக்கும் போது பல தடைகள் வந்தன. எனினும், சுவசெரிய சேவை மூலம் இன்று பல இலட்ச உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ” எனத் தெரிவித்தார்.