நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லொறி வெடித்ததில் 18 பேர் உயிரிழப்பு
நைஜீரியா நாட்டிலுள்ள இனுகு மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெட்ரோல் ஏற்றியபடி டேங்கர் லொறியொன்று வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இனுகு – ஒனிஸ்டா வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது.
லொறி மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் லொறி தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது.
இதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்ததோடு, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.