1750 சம்பள அதிகரிப்பு – ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

1750 சம்பள அதிகரிப்பு – ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது அடிப்படைச் சம்பளத்தை 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக 200 ரூபாய் அதிகரிப்பதற்கும், வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவினை அரசாங்கம் செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

அதற்கமைய, சம்பள அதிகரிப்பிற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )