
பிரித்தானியாவில் 171 டெலிவரி ரைடர்கள் நாடு கடத்தல்
பிரித்தானியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக வேலை செய்த 171 டெலிவரி ரைடர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஆபரேஷன் ஈக்வலைஸ் (‘Operation Equalise) என்ற பெயரில், கடந்த மாதம் 07 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது.
டெலிவரி ரைடர்கள் நிறுத்தி அவர்களின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தோர் சட்டவிரோதமாக வேலை செய்தமை கண்டறியப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, நாடுகடத்தலுக்காக தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES உலகம்
