வீதி விபத்தில் 16 வயது நடிகர் உயிரிழப்பு
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பேபி ட்ரைவர் திரைப்படத்தில் யங் பேபியாக நடித்தவர் ஹட்சன் மீக்.
இந்நிலையில் ஹட்சன் அலபாமாவின் வெஸ்டாவியா ஹில்ஸ் பகதியில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த மீக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
ஹட்சனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.