155 இலக்க பஸ் இன்று முதல் மீண்டும் சேவையில்

கொழும்பில் இன்று (11) முதல் 155 இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155ஆம் இலக்க பஸ் சேவை, சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகக்கு அமைய மாநகர சபை அமர்வுகள் மற்றும் பிற அபிவிருத்தி கூட்டங்களில் தொடர்ச்சியாக இந்த பஸ் சேவையின் தேவைகள் தொடர்பில் எடுத்துக்கூறப்பட்டன.
இதன் பயனாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் கீழ் இன்று (11) காலை 5.30 மணி முதல் 155 பேருந்து சேவை மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் வரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.