20 நாட்களுக்குள் 1 இலட்சத்து 54 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

20 நாட்களுக்குள் 1 இலட்சத்து 54 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

அரிசி இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் 20 நாட்களுக்குள் 1 இலட்சத்து 54 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதியின் இரண்டாவது கட்டம் இம்மாதம் 24ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன்படி துறைமுகத்தில் இருந்து 75,000 மெட்றிக் தொன் அரிசியை சுங்கம் விடுவித்துள்ளது.

குறித்த அரிசித் தொகையில் 32,000 மெட்றிக் தொன் பச்சை அரிசியும், 43,000 மெட்றிக் டொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குகின்றன.

இதற்கு மேலதிகமாக, 12,000 மெட்றிக் தொன் அரிசி கப்பல் மூலம் வந்துள்ளதுடன், அந்த கையிருப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த 24ஆம் திகதி வெளியிட்டார், இதனால் அரிசி இறக்குமதிக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட அரிசி இறக்குமதியின் கீழ், இம்மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 67,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Share This