
வீதி தடை காரணமாக 1,500 பேருந்து பயணங்கள் ரத்து
சீரற்ற வானிலையால் விதிக்கப்ட்ட வீதி தடை காரணமாக இலங்கை போக்குவரத்து சபையால் இயக்கப்படும் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே ரத்து செய்யப்பட்ட இந்த பேருந்துகளில் சுமார் 15,000 பயணிகள் ஏற்கனவே இருக்கைகளை முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இருக்கைகளை முன்பதிவு செய்த பயணிகள் வேறு திகதிக்கு தங்கள் முன்பதிவுகளை மீண்டும் திட்டமிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்று திகதியைப் பெற பயணிகள் 1315 அவசர இலக்கத்திற்கு அல்லது 070 3110 506 என்றை இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.
இந்த நடவடிக்கைக்கு மேலதிக கட்டணம் அறவிப்படாது எனவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தற்போது, நுவரெலியா, நாவலப்பிட்டி, யாழ்ப்பாணம், வலப்பனை மற்றும் மூதூர் போன்ற வழித்தடங்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், பிற இடங்களுக்கான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அந்த வழித்தடங்களுக்கான இருக்கை முன்பதிவுகள் மீண்டும் கிடைக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
