14 அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் கடத்தல்: கேரளாவில் சம்பவம்
கேரள மாநில விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 14 அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சரத் மற்றும் பிந்து ஆகியோரே சூட்கேசில் மறைத்து வைத்த நிலையில் இப் பறவைகளை கொண்டு வந்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பறவைகள் ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 2 இலட்சம் வரையில் மதிப்புடையவை.
குறித்த பறவைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.