கடந்த 24 மணித்தியாலங்களில் 13 உயிரிழப்புகள் பதிவு
நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹட்டன், மாரவில, அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல, மட்டக்களப்பு, மிரிஹான, கெபித்திகொல்லாவ மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (21.12.2024) இந்த விபத்துக்கள் சம்பவித்துள்ளன.