
2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் படுகொலை
2025ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு 122 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பத்ரிக்கையாளர்களில் 118 பேர் ஆண்கள் என்பதுடன், 10 பேர் பெண்கள் ஆவர்.
கொல்லப்பட்டவர்களில் 74 பேர் மேற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில் 56 பத்திரிகையாளர்கள் காசாவில் இடம்பெற்ற இஸ்ரேல் – ஹமாஸ் போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் 18 பேரும், சீனா உள்ளிட்ட ஆசியா-பசிபிக் நாடுகளில் 15 பேரும், அமெரிக்காவில் 11 பேரும், ஐரோப்பிய நாடுகளில் 10 பேரும் இவ்வாறு பணியின்போது கொல்லப்பட்டனர்.இந்தியாவில் கடந்த ஆண்டில் 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாவும் சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு கூறியுள்ளது.
