
சட்ட விரோத தொழில் ஈடுபட்ட 11 பேர் பிரித்தானியாவில் கைது
பிரித்தானியாவில் சர்ரே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெம்ப்டன் பார்க் கிறிஸ்மஸ் சந்தையில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஈராக் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஆறு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES உலகம்
