உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தங்களை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான சட்டத் திருத்த செயல்முறையை ஆரம்பித்துள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

பழைய வேட்புமனுக்களை நிராகரிப்பதன் மூலம் 2022ஆம் ஆண்டின் பின்னர் புதிதாக இணைக்கப்பட்ட 10 இலட்சம் வாக்களர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

340 உள்ளூராட்சி சபை நிறுவனங்களுக்காக 8,711 வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிலிருந்து 80,672 பேர், 24 மாநகரசபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்காக வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

இவ்வாறு உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்புமனுக்களை வழங்கியவர்களுள் சுமார் 3000 அரசாங்க உத்தியோகத்தர்கள் உள்ளடங்குகின்றனர்.

வேட்புமனுக்களை வழங்கிய குறித்த வேட்பாளர்களுள் சுமார் 8000 பேர் வெளிநாடுகளுக்குச் சென்று அல்லது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This