ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் நேற்று (05) மாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து கொட்டகலையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர், மற்றும் குயில்வத்த பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வாகனத்தை வாகனத்தை முச்சக்கர வண்டி முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில், ஒரு சிறு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் ஒரு சிறு குழந்தையும், ஒரு பெண்ணும் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஹட்டன் பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This