வேர்க்கடலை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
அய்யனார் வீதி சுண்ணாகம் பகுதியில் வேர்க்கடலை சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அய்யனார் வீதி சுண்ணாகம் பகுதியில் வசித்த சசிதரன் தனியா என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
11ஆம் திகதி பிற்பகல் குழந்தை வேர்க்கடலை சாப்பிட்ட வேளையில் புரைக்கேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக நேற்று (12) காலை குழந்தைக்கு தொடர் வாந்தி ஏற்ப்பட்டுள்ளது.
இன்று (13) காலை ஆறரை மணியளவில் பெற்றோர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை அழைத்து செள்றபொழுது குழந்தை உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விசாரணைகளை மேற்கொள்ளும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
உடல் கூற்று பரிசோதனையின்போது மூச்சுக்குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறலே இறப்புக்கு காரணம் என அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.