விரைவில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

விரைவில் புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்தவும் இன்றைய அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய சாரதி அனுமதி பத்திரம் தொடர்ந்து அமல்படுத்தவும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது ஸ்மார்ட் அட்டை சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 15 ஆண்டுகள் கடந்துள்ளதுடன், குறித்த நிறுவனங்களுக்கிடையேயான தரவுப் பரிமாற்ற வசதிகளை
வழங்கி புதிய தொழிநுட்பத்திற்கமைய உலகில் பல நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவது சிறந்ததென அரசு கண்டறிந்துள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற அனுமதிப்
பத்திரத்திற்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை துரிதமாக அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்

அதுவரை சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்குத் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற முறைமையைத் தொடர்ந்தும்
நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share This