வாழ்வில் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அனைவரும் திகழவேண்டும் – பிரதி அமைச்சர் சாந்தலிங்கம் பிரதீப்
வாழ்வில் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அனைவரும் திகழவேண்டும் என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபின் புது வருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மலர்ந்த புது வருடம், இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் அமைதியும் ,மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்த செழிப்பான ஆண்டாகவும், மனிதநேயம் முதன்மை பெற்று “வளமான நாடு, அழகான வாழ்க்கை” அனைவருக்கும் கை கூடும், வாழ்வில் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக திகழ
எனது உளமார்ந்த புது வருட நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். என தெரிவித்தார்.