ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா

அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற இந்த அணு சக்தி ஏவுகணையை கடந்த 2018ஆம் ஆண்டு அறி​முகம் செய்​தது. சக்​தி​வாய்ந்த ஏவு​கணை தயாரிப்பு திட்​டத்​தில் ஈடுபட​வேண்​டாம் என்ற ஒப்பந்​தத்​தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001ஆம் ஆண்டு வெளியேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்​தப்​பட்டன. அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு ஏவு​கணை திட்​டங்​களும் விரிவுபடுத்​தப்​பட்​டன.

இதையடுத்து 9எம்​730 புரேவெஸ்ட்​னிக் என்று அணு சக்தி ஏவுகணையை ரஷ்யா அறி​முகம் செய்​தது. இதை அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு ஏவு​கணை திட்​டத்​துக்​கான ரஷ்​யா​வின் பதிலடி நடவடிக்கை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறி​னார். இந்த ஏவு​கணையை எவ்​வளவு தூரம் வேண்​டு​மா​னாலும் செலுத்த முடி​யும். இது பறந்து செல்​லும் பாதையை​யும் கணிக்க முடி​யாது எனவும் அவர் கூறினார்.

இந்​நிலை​யில் இந்த ஏவு​கணையை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது. இந்த ஏவு​கணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கி.மீ தூரம் சென்​ற​தாக ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் கூறி​னார்.இந்த சோதனை வெற்​றிகர​மாக முடிந்​ததையடுத்து உக்​ரைன் போரை நடத்தி வரும் இராணுவ உயர் அதி​காரி​களு​டன் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பேசி​னார். போர்க்​கால சீருடை அணிந்து பேசிய புட்டின், ‘‘இது போன்ற சக்​தி​வாய்ந்த ஏவு​கணை உலகில் எந்த நாட்​டிட​மும் இல்​லை. இது போன்ற ஆயுதத்தை உரு​வாக்​கு​வது சாத்​தி​யமில்லை என ரஷ்ய நிபுணர்​கள் முன்பு கூறினர். ஆனால் தற்​போது, இந்த முக்கிய பரிசோதனை வெற்​றிகர​மாக நிறைவடைந்​துள்​ளது’ என பெரு​மிதத்​துடன் கூறி​னார்

Share This