
யாழ்ப்பாணத்தில் ரிவோன் லங்கா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவரான ஏ மோட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய ரோவர் இருசக்கர ஊர்தி காட்சி அரங்கு கோலாகலமாகத் திறப்பு!
யாழ்ப்பாணம் பிரதான பகுதியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுர வீதியில், வாகனப் பிரியர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ரிவோன் லங்கா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவரான ஏ மோட்டர்ஸ் தனது புதிய ரோவர் இருசக்கர ஊர்திக் கிளையினை மிகக் கோலாகலமாகத் திறந்து வைத்துள்ளது. பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், பல புதிய வகை இருசக்கர ஊர்திகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களுக்குச் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும் நவீன ரக ரோவர் ஊர்திகள், விளையாட்டு வகை மற்றும் மின்சார, எரிபொருள் இருசக்கர ஊர்திகள் பல வண்ணங்களில் இந்த புதிய விற்பனையகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. புதிய ஊர்திகளை நேரில் பார்வையிட்டுத் தேர்வு செய்யவும், தங்களுக்குப் பிடித்தமான வகைகளைப் பற்றிய விபரங்களை உடனடியாக அறிந்து கொள்ளவும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாகனப் பிரியர்கள், புதிய ரோவர் ஊர்திகளைக் கொள்வனவு செய்யவும் மேலதிக விபரங்களைப் பெறவும் இலக்கம் 399, கடிகாரக் கோபுர வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஏ மோட்டர்ஸ் காட்சி அரங்குக்கு நேரில் வருகை தரலாம். தொலைபேசி வழியாகத் தொடர்புகொள்ள விரும்புவோர் 075 820 0594 என்ற இலக்கத்தை அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

