
மோடி – அநுர சந்திப்பு
AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய தலைநகர் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை மிகுந்த நட்புடன் வரவேற்ற இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், எதிர்காலத்தில் இலங்கையில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட உள்ள திட்டங்கள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆழமான கலந்துரையாடலை நடத்தியுள்ளதுடனர்.
இதேவேளை, ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு வழங்கிய விசேட ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

