மூன்று முக்கிய சபைகளுக்கான முடிவுகள் வெளியாகின..!

மூன்று முக்கிய சபைகளுக்கான முடிவுகள் வெளியாகின..!

அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகள்

காலி மாவட்டம் அம்பலாங்கொடை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதன்படி, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 5,736 வாக்குகள் -11 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,934 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,928 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 553 வாக்குகள் – 1 உறுப்பினர்

சுயாதீன குழு – 1 (IND1) – 552 வாக்குகள் – 1 உறுப்பினர்

சர்வஜன அதிகாரம் (SB)- 447 வாக்குகள் – 1 உறுப்பினர்.

அம்பாந்தோட்டை மாவட்டம் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,750 வாக்குகள் – 8 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3,874 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி – 1,511 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1,279 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 816 வாக்குகள் – 1 உறுப்பினர்.

பதுளை மாவட்டம் அப்புத்தளை நகர சபைக்கான வாக்களிப்பு முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் அப்புத்தளை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் சுயாதீன குழு – 1 வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

சுயாதீன குழு – 1 (IND1) – 1038 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP) – 844 வாக்குகள் -4 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 374 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

Share This