மும்பையில் பயணிகள் படகுடன் மோதிய கடற்படை படகு – 13 பேர் உயிரிழப்பு

மும்பையில் பயணிகள் படகுடன் மோதிய கடற்படை படகு – 13 பேர் உயிரிழப்பு

மும்பை கடற்கரையில் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 18) விபத்துக்குள்ளான தனியார் படகில் இருந்த பயணிகளுக்கு உயிர் பாதுகாப்பு அங்கி (life jackets) வழங்கப்படாததால், குறைந்தது 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எலிஃபண்டா தீவுக்குச் சென்று கொண்டிருந்த படகு, கேட்வே ஆஃப் இந்தியா அருகே இந்திய கடற்படையின் வேகப் படகில் மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்த வித்தை அடுத்து விரைந்து செயப்பட்ட அதிகாரிகள் 115 பேரை மீட்டிருந்தனர்.

மும்பையின் சகினாகாவைச் சேர்ந்த நாத்தாராம் சவுத்ரி என அடையாளம் காணப்பட்ட கடற்படை வேகப் படகின் ஓட்டுநர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடற்படைப் படகு ஏதோ ஒரு கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகில் மோதியதாக கூறப்படுகின்றது.

இந்த கொடூரமான அனுபவத்தை நினைவுகூர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், படகில் இருந்த பயணிகள் யாருக்கும் உயிர் பாதுகாப்பு அங்கி வழங்கப்படவில்லை என்று கூறினார்.

விபத்தை அடுத்து தண்ணீரில் விழுந்த பலரை இழுத்து படகில் ஏற்றினோம். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து, கடற்படை எங்களை மீட்டது.

ஆனால் அதற்குள், நாங்கள் என் அத்தையை இழந்துவிட்டோம்,” என்று உத்தரபிரதேச மாநிலத்தின் காஜிபூரைச் சேர்ந்த கவுதம் குப்தா தெரிவித்துள்ளார்.

கடற்படை படகு ஓட்டுநர் கடலில் ஸ்டண்ட் செய்ததாக மற்றொரு பயணி குற்றம் சாட்டினார்.

“கடற்படையின் வேகப் படகு ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தது. இது எங்கள் சந்தேகங்களை எழுப்பியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து, படகு எங்கள் படகுடன் மோதியது,” என்று பாதிக்கப்பட்டவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்திய கடற்படை பின்னர் வெளியிட்ட அறிக்கையில், படகு உண்மையில் இயந்திர சோதனைகளுக்கு உட்பட்டு வருவதாகவும், கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தெரிவித்திருந்தது.

உயிரிழந்தவர்களில் கடற்படை அதிகாரி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் மகாராஷ்டிரா மாநில முதல்வரும் பின்னர் கொல்லப்பட்ட பயணிகளின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு அறிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This