மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது – ஒருவர் பலி

மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது – ஒருவர் பலி

செல்லகதிர்காமம் பகுதியில் உள்ள ஏரியில ஐந்து மாணவர்களுடன் சென்ற  படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லகதிர்காமம் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உயர்தரம் பயின்ற ஐந்து  மாணவர்கள்  இந்த படகில் பயணித்ததால் படகு கவிழ்ந்ததை அடுத்து கிராம மக்கள் உடனடியாக அவர்களை காகாப்பாற்றினர்.

எனினும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This