மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்காவின் முதற்கட்டம்

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிளீன்  ஸ்ரீலங்காவின் முதற்கட்டம்
கிளீன் ஸ்ரீலங்காஎன்ற பாரிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியான நிலைபேறான சுற்றுச்சூழலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Pure BHC ஒரு சுத்தமான ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான  செயற்திட்டம் வெள்ளிக்கிழமை (2025.01.17) மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில், Pure BHC செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை வளாகம், பாடசாலையை அண்டியுள்ள பிரதேசங்கள் என்பன கல்லூரியின் சுகாதாரக் கழகம் (Hindu Health Care இணைந்து சாரணர் படையணி, அதிபர் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரினால் சுத்தம் செய்யப்பட்டன.
Share This