மத்திய சூடானில் மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி

மத்திய சூடானில் மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி

மத்திய சூடானில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், பிராந்தியம் முழுவதும் இதேபோன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் ஆயுதப் படைகளுடன் மூன்று வருட உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள துணை ராணுவக் குழுவான விரைவு ஆதரவுப் படைகளால் புதன்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள ஷேக் அகமது அல்-பதாவி மசூதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது “சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும், வழிபாட்டுத் தலங்கள் மீதான கடுமையான தாக்குதலாகவும்” இருப்பதாக மருத்துவர்கள் வலையமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )