மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம்

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம்

(க.கிஷாந்தன்)

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று இன்று (10.12.2024) மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாவலப்பிட்டி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

40 – 45 வயது மதிக்கதக்க இனந்தெரியாத நபரின் சடலம் தொடர்பில் நாவலப்பிட்டி நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share This