புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தொலைபேசிகள் மீட்பு
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் அறையில் கையடக்கத் தொலைபேசி, டேட்டா கேபிள், சார்ஜர் மற்றும் சிம் கார்ட் என்பன மீட்க்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.
சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு சிறைச்சாலையின் சிறப்பு பிரிவில் உள்ள அறையை நேற்று ஆய்வு செய்துள்ளது. மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியின் உரிமையாளர் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.