நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டிகள் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

நேருக்கு நேர் மோதிய முச்சக்கர வண்டிகள் – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  மூவர் பசறை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை – செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ஆம் கட்டை தமிழ் தேசிய பாடசாலைக்கு அருகாமையில் பசறை பக்கம் இருந்து லுணுகலை பக்கமாக சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று பசறை 13 ம் கட்டை பகுதியில் இருந்து பசறை நகர் நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் சாரதியான 65 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பசறை பக்கமிருந்து லுணுகலை பக்கமாக சென்று கொண்டிருந்த
முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்கள் சாரதி உட்பட அனைவரும் மது போதையில் இருந்ததாகவும் பின்னர் விபத்து இடம்பெற்றதன் பின்னர் தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 31, 39 வயதுடைய சாரதி உட்பட மேலும் ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ராமு தனராஜா)

Share This