நுகேகொடையில் இருந்து சஜித்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

கூட்டு எதிரணியினரின் அடுத்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ அழைப்பு விடுத்தார்.
நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
அத்துடன், கட்சிகள் பங்கேற்காவிட்டாலும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து விட்டனர். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியும் இனி வரும் என்று உதய கம்மன்பில தமதுரையின்போது குறிப்பிட்டார்.
