ட்ரம்ப் புட்டின் சந்திப்பில் ஜெலன்ஸ்கி பங்குகொள்வாரா? ரசிய உக்ரெய்ன் போர் முடிவுக்கு வருமா?

பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்களும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ரசிய – உக்ரெய்ன் போர் முடிவுக்கு வரலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரசிய ஜனாதிபதி புட்டின் ஆகியோர் எதிர்வரும் 15 ஆம் திகதி சந்தித்து பேசவுள்ள நிலையில் மேற்படி நாடுகளின் கூட்டக் கோரிக்கை இரு தலைவர்களின் சந்திப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இல்லாமல் அமெரிக்காவும் ரசியாவும் 15 ஆம் திகதி நடத்தவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரசிய ஜனாதிபதி புட்டின் ஆகியோர் சந்திக்கும்போது அல்லது சந்தித்hத பின்னர் உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்தால் போர் நிறுத்தத்துக்கு வழி ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது