ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான், வியட்நாம் அழைப்பு

ஜனாதிபதி அநுரவுக்கு ஜப்பான், வியட்நாம் அழைப்பு

நாடு மற்றும் நாட்டு மக்களை அடகுவைக்காது, காட்டிக்கொடுக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் சர்வதேச உறவு பேணப்பட்டுவருகின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் சர்வதேச தொடர்பு இல்லாமல்போகும் என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இந்திய பிரதமர் இங்கு இருப்பார். இதற்கு முன்னர் எவரும் இப்படி வந்ததில்லை.

தேர்தல் முடிந்த பிறகு இந்தியா, சீனாவிடமிருந்து அழைப்பு வந்தன. தற்போது ஜப்பான் மற்றும் வியட்நாம் அழைத்துள்ளன. இவ்வாறு வலுவாக சர்வதேச தொடர்பை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

சர்வதேச தொடர்பு இல்லாமல்போகும் என்றார்கள், நாட்டையும், நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்காமல், நேரடியாக கொடுக்கல், வாங்கல் செய்யும் வகையில் சர்வதேச உறவு உள்ளது.
வெளிநாட்டு முதலீடு வராது என்றார்கள். ஆனால் முதலீட்டாளர்கள் வந்தவண்ணமுள்ளனர்.” – என்றார்.

Share This