சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பம்

சுற்றுலா துறையை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பம்
மட்டக்களப்பு நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் இன்று மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் எஸ் தணன்ஜெயன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வாவி பெருக்கெடுத்ததன் காரணமாக மட்டக்களப்பு  பிரதான வீதியை அண்டிய   பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி காணப்பட்டது
இதனால் சுற்றாடல் அசுத்தமாக்கப்பட்டதுடன் இதனை அண்டிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் உயிர் வாழும் மீன் இனங்கள் பாதிக்கப்பட்டதுடன் கால்நடைகளும்  இக்கழிவுகளை உண்பதால் பாதிப்படைந்தன
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று  ஒரு கட்டமாக சுத்தப்படுத்தும் பாரிய சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது
இதன்போது மாநகர சபையின் ஊழியர்கள் சுகாதார தரப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Share This