சீரற்ற காலநிலையால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பாய்வு

சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது.
நெற்செய்கை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், பெய்த மழையினால் நெற்செய்கைக்கு எவ்வித சேதமும் பதிவாகவில்லை என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், இலவச காப்பீட்டு பாதுகாப்பு பெறும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாகவும் இதுவரை உறுதியான அறிக்கைகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சபையின் அதிகாரிகள் தொடர்ந்து விவசாயிகளுடன் தொடர்பில் ஈடுபட்டு, பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று, நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களைத் தயாரித்து வருவதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

