சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்: புற்றுநோய் காரணமாக உயிரிழப்பு
சின்னத்திரை நடிகரான நேத்ரன் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேத்ரனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவு முழு சின்னத்திரை ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கிட்டத்தட்ட 25 வருடங்கள் நடிகராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.