சினிமாவில் 32 வருடங்கள் பூர்த்தி: தீ இது தளபதி
தமிழ் சினிமாவில் ஹீரோவாக 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் இளைய தளபதி விஜய்.
1992ஆம் ஆண்டு வெளிவந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜய்.
தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் அனைவரினதும் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார்.
இந்நிலையில் தொடர்ந்தும் பல ஹிட் திரைப்படங்கள் வரிசையாக வந்தன.
இவ்வாறு சினிமாவில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார்.
32 வருடங்களில் இதுவரையில் 68 திரைப்படங்கள் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் 69 ஆவது திரைப்படமான தளபதி 69 அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
இதன்படி சினிமாத் துறையில் 32 ஆண்டுகளைக் கடந்த தளபதிக்கு வாழ்த்துக்கள்.