
கொட்டும் மழைக்கு மத்தியில் வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்
மாவீரர்களின் நினைவு நாளான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் குழு ஒன்றிணைந்து மாவீரர் நாளை அனுஸ்டித்தனர்.
வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பிரஜைகள் குழுவின் தலைவர் கோ. ராஜ்குமார் ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார்.
இதனை அடுத்து மாவீரர்களின் பெற்றோர் திருவுருவ படங்களுக்கு விளக்கியதோடு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினர். இதன்போது பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வவுனியா தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பிரதான திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதான திருவுருவ படங்களுக்கு தீபமேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
